சென்னை,
தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற ஆபரேஷன் கஞ்சா வேட்டையில் 2,423 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் ,மேலும் 3,562 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்
கஞ்சா வியாபாரிகளின் சொத்துக் கணக்குகளையும் முடக்கி போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்
மேலும் 6,319 குட்கா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு ,44.9 டன் குட்கா மற்றும் 113 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என போலீசார் தெரிவித்துள்ளனர்