மாவட்ட செய்திகள்

பசுவந்தனை பகுதியில் சளி, காய்ச்சல் உள்ளதா? என சுகாதார துறையினர் வீடு, வீடாக ஆய்வு - கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம்

பசுவந்தனை பகுதியில் சுகாதார துறையினர் வீடு, வீடாக சென்று, யாருக்காவது சளி, காய்ச்சல் உள்ளதா? என ஆய்வு செய்தனர். மேலும் அந்த பகுதியில் கிருமி நாசினி தெளிக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.

தினத்தந்தி

ஓட்டப்பிடாரம்,

தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனையை சேர்ந்த ஒருவர் டெல்லிக்கு சுற்றுலா சென்று திரும்பினார். அவர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்.

இதைத்தொடர்ந்து ஓட்டப்பிடாரம் தாசில்தார் ரகு, மண்டல துணை தாசில்தார்கள் கருப்பசாமி, கண்ணன், கோவில்பட்டி சுகாதார பணிகள் துணை இயக்குனர் அனிதா ஆகியோர் தலைமையில் டாக்டர்கள் ஜீவராஜ்பாண்டியன், அன்புமாலதி, அன்பரசு, சுசிலா, அனிலா, ராமலட்சுமி உள்பட 15 டாக்டர்கள், 10 சுகாதார ஆய்வாளர்கள், 28 கிராம சுகாதார செவிலியர்கள், 140 அங்கன்வாடி பணியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி சுகாதார பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் நேற்று காலையில் பசுவந்தனை பகுதிக்கு வந்தனர்.

வீடு, வீடாக ஆய்வு

அவர்கள் பசுவந்தனை, நாகம்பட்டி, ஜம்புலிங்கபுரம், குதிரைகுளம், விட்டிலாபுரம், மீனாட்சிபுரம், துரைசாமிபுரம், ஆழிபச்சேரி, வடக்கு கைலாசபுரம், தெற்கு கைலாசபுரம் ஆகிய கிராமங்களில் வீடு, வீடாக சென்று, யாருக்காவது சளி, இருமல், மூச்சுத்திணறல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் உள்ளதா? என்று ஆய்வு செய்தனர்.

கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் அந்த பகுதியில் கிருமி நாசினி தெளிக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.

சாலைகள் மூடல்

மணியாச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் மேற்பார்வையில் பசுவந்தனை போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமொழியன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பசுவந்தனை செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டன. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு உள்ளன.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்