ஆம்பூர்,
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரம்ஜான் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இதனைமுன்னிட்டு ஆம்பூர் ஈத்கா மைதானம், மஜ்ஹருல் உலூம் கல்லூரி, மஜ்ஹருல் உலூம் மேல்நிலைப்பள்ளி ஆகிய 3 இடங்களில் ரம்ஜான் சிறப்பு கூட்டுத்தொழுகை நடந்தது. முஸ்லிம்கள் காலையில் எழுந்து குளித்து புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகை நடந்த பகுதிகளுக்கு சென்றனர்.
ஆம்பூர் ஈத்கா மைதானத்தில் ஜாமியா மசூதி இமாம் கதீப்முப்தி முஹம்மத் சலாவுத்தீன் சிறப்பு சொற்பொழிவாற்ற, சின்னமசூதி இமாம் குல்ஜார்அஹமத் சிறப்பு பெருநாள் கூட்டுத்தொழுகை நடத்தினார். மஜ்ஹருல் உலூம் கல்லூரி மைதானத்தில் காலை சவுக் மசூதி கதீப் முப்தி இம்தியாஸ் சிறப்பு சொற்பொழிவாற்ற, மஸ்ஜிதே ரஹமானியா இமாம் கதீப்முப்தி முஜம்மில் சிறப்பு தொழுகை நடத்தினார். மஜ்ஹருல் உலூம் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மொஹியத்தின்பூரா மசூதி இமாம் கதீப்ஹகீம் ஜியாவுத்தீன் சிறப்பு சொற்பொழிவாற்ற, பிலால் மசூதி இமாம் அல்லாபகஷ் சிறப்பு தொழுகை நடத்தினார்.
பிரமுகர்கள்
3 இடங்களில் நடந்த சிறப்பு தொழுகையில் ஷபிக் ஷமில் குழும தலைவர் என்.எம்.சயீத், பரிதா குழும தலைவர் மெக்கா ரபீக்அஹமத், என்.எம்.இசட் குழும தலைவர்கள் என்.எம்.ஜக்ரியா, ஜமில்அஹமத், அகில் லெதர் குழும தலைவர்கள் மொகிபுல்லா, ஆகில்அஹமத், ஆம்பூர் அஹ்ல சுன்னத் வல் ஜமாஅத் தலைவர் மற்றும் காஜியுமான ஹாபிஸ் காதீப் ஷஹாபுத்தின், உதவித்தலைவர் மத்தேக்கார் அஷ்பாக்அஹமத், டாப்ரப்பர் ஷமீம்அகமது, டி.ஏ.டபிள்யு குழும தலைவர்கள் டி.ரபீக்அஹமத், பைசான், முன்னாள் எம்.எல்.ஏ. அஸ்லம்பாஷா, தோல் தொழிற்சாலையின் மேலாளர் கள் பிர்தோஸ் கே.அகமது, தமீம்அகமது, ஸ்டார் பிரி யாணி முனீர்அகமது, கிரேசி யஸ் பள்ளி தாளாளர் முகமது உமர், டாக்டர் சையத்முக்தார், முன்னாள் நகரசபை தலைவர் நஜீர்அஹமது, முன்னாள் துணைத்தலைவர் கே.நஜர் முஹமத், அ.தி.மு.க. மாவட்ட முன்னாள் பொருளாளர் வர்தாரஷித், முன்னாள் சிறு பான்மை பிரிவு செயலாளர் கலிலூர்ரகுமான், முன்னாள் நகரசபை உறுப்பினர்கள் கே.அகில்அஹமது, அமீன்பாஷா, முனீர்சுவிட்ஸ் ரபீக்அஹமத், சுபேர், சித்திக், தி.மு.க.வை சேர்ந்த ஆசிப்கான், எம்.ஏ.ஆர்.ஷமில்அஹமது, காங்கிரஸ் கட்சி சமியுல்லா, எச்.பி.ரியாஸ்அஹமத், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர தலைவர் கே.இக்பால்அஹமது, த.மு.மு.க.வை சேர்ந்த நஜீர் அஹமது, தபரேஸ் டாப்ரப்பர் அபுரார், அகில்லெதர் பைசல், நபில், இட்ராஜ் ஜாகித்அகமத், மஜ்ஹருல் உலூம் கல்லூரி முதல்வர் ஆதில்அஹமத், கல்வியியல் கல்லூரி நிர்வாக அலுவலர் அப்துல்ரஷித், நகர வர்த்தக சங்க துணை தலைவர் ஹபிபூர்ரகுமான், வணிகர் சங்க பேரமைப்பு செயலாளர் முனீர்அகமது, சமூக சேவகர் அல்தாப் உள்பட பல்லாயிரக் கணக்கானோர் கலந்து கொண்டனர்.
வாழ்த்து
தொழுகை முடித்து வந்த முஸ்லிம்கள் ஒருவரையொரு வர் கட்டி தழுவி வாழ்த்துக் களை பரிமாறிக் கொண்டனர். ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தனராஜன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
ஆம்பூர் அருகே சோலூர் ஈத்கா மைதானத்தில் (சாலிமார்) நடந்த தொழுகை யில் அன்சர் மவுலானா, முபாரக்அலி, அமீர்ஜான், குஞ்சார்மொய்தீன், ஆறுவிரல் அப்துல்ரகுமான், சிராஜூதின், மைதீன், முத்தவல்லி சோட்டா பாய் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வாணியம்பாடி
வாணியம்பாடி செட்டி யப்பனூர் ஈத்கா மைதானத்தில் நடந்த தொழுகையில் தொழிலதிபர்கள் பட்டேல் யூசுப், எஸ்.டி.நிசார்அகமது, நாசீர்கான், பி.எம்.டி.இக்பால், ஷகீல்அகமது, ஹபீஸ், வக்கீல்அஹமத், ம.தி.மு.க. நகர செயலாளர் நாசீர்கான் உள்பட ஆயிரக்கணக் கானோர் கலந்து கொண்ட னர்.
வளையாம்பட்டு ஈத்கா மைதானத்தில் நடந்த தொழுகையில் தொழிலதிபர் அமானுல்லாபாஷா, சையத்நிசார்அஹமது, நூருல்அமீன் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். ஜாப்ராபாத் ஈத்கா மைதானத்தில் நடந்த தொழுகையில் எச்.பி.எம்.ஷகீல்அஹமத், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கலீல், ரபீக்அகமது, ஜமீர் அஹமத், சமியுல்லா மற்றும் உதயேந்திரத்தில் நடந்த தொழுகையில் முத்தவல்லி ஜான்பாஷா, ரியாஸ்அலி, அஸ்கர் மற்றும் பெரிய பேட்டையில் நடந்த தொழுகையில், நேதாஜி நகரில் நடந்த தொழுகையில் ஜகீர், சாதிக்பாஷா, இஸ்மாயில்,, ஜீவா நகர் ஈத்கா மைதானத்தில் நடந்த தொழுகையில் பேராசிரியர் அப்துல்காதர், ரியாஸ்அகமது, வசீம்அக்ரம் உள்பட ஏராளமானோரும் கலந்து கொண்ட னர்.
ஆலங்காயம் ஈத்கா மைதானத்தில் நடந்த தொழுகையில் தொழிலதிபர் தப்ரேஸ், ரசீத், சமியுல்லா உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். வாணியம்பாடி பகுதியில் துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரம் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் மசூதிகள் மற்றும் ஈத்கா மைதானங்களில் நேற்று சிறப்பு தொழுகை நடந்தது. ரம்ஜான் பண்டிகையையொட்டி புத்தாடை உடுத்தி இஸ்லாமியர்கள் தொழுகையில் கலந்துகொண்டனர்.
வேலூரில் ஆர்.என். பாளையம் ஈத்கா மைதானம் மற்றும் சைதாப்பேட்டை பெரிய மசூதி, ஆற்காடு ரோட்டில் உள்ள மசூதியில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர். தொழுகைக்குபிறகு ஒருவரையொருவர் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்து தெரிவித்தனர்.
பேரணாம்பட்டு
பேரணாம்பட்டில் சிறிய ஈத்கா, பெரிய ஈத்கா, நவாப்தரியகான், தரைக்காடு, ஏரிகுத்திமேடு, தவ்ஹீத்திடம் மற்றும் மேல்பட்டி பகுதியில் உள்ள வளத்தூர், எம்.வி.குப்பம், புதூர் அழிஞ்சிகுப்பம், குளிதிகை உள்ளிட்ட இடங்களில் சிறப்பு தொழுகை நடந்தது. இந்த சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டிருந்தது.