வாலாஜாபாத்,
வாலாஜாபாத் ஒன்றியத்திற்குட்பட்ட பரந்தூர் ஊராட்சியில் மனுநீதிநாள் முகாம் நடந்தது. இந்த முகாமிற்கு காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா தலைமை தாங்கினார். முகாமில் 24 பயனாளிகளுக்கு ஸ்மார்ட் கார்டு, 35 பேருக்கு பழங்குடியினர் உறுப்பினர் அடையாள அட்டை, 14 பயனாளிகளுக்கு இருளர் இன சான்று, 12 பேருக்கு ஆதரவற்றோர் விதவை சான்று, 4 பேருக்கு சிறு விவசாயி சான்று, சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் 46 பேருக்கு முதியோர் உதவித்தொகை உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
இதில் காஞ்சீபுரம் எம்.பி. மரகதம் குமரவேல், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வாலாஜாபாத் பா.கணேசன், வி.சோமசுந்தரம், காஞ்சீபுரம் வருவாய் கோட்ட அதிகாரி க.ராஜூ, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் நாராயணன், வேளாண்மை துறை இணை இயக்குனர் கோல்டி பரேமாவதி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அதிகாரி மாலதி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.