மாவட்ட செய்திகள்

பெங்களூரு - சென்னை விரைவு சாலை திட்டத்திற்கான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் ஒத்திவைப்பு; கலெக்டர் தகவல்

பெங்களூரு - சென்னை விரைவு சாலை திட்டத்திற்கான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் ஒத்திவைப்பு

தினத்தந்தி

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பொன்னையா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.,

கடந்த மாதம் 24-ந்தேதி நாளிட்ட செய்தி வெளியீட்டின்படி நெடுஞ்சாலை ஆணையத்தின் உத்தேசிக்கப்பட்ட பெங்களூரு- சென்னை விரைவு சாலை திட்டத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைய உள்ள 8 வழி சாலை கட்டுமான திட்டத்திற்காக வருகிற 26-ந்தேதி காலை 11 மணியளவில் மப்பேடு - கீழச்சேரி சந்திப்பு பகுதியான கீழச்சேரி பஸ் நிலையம் அருகே பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம நடைபெறுவதாக இருந்தது. தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்