மாவட்ட செய்திகள்

இயற்கை வளங்களை காப்போம்

பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பது சொல் வழக்கு. கடந்து முடிந்த ஆண்டு ஒவ்வொருவருக்கும் ஒரு படிப்பினையை கற்று கொடுத்து இருக்கும். புத்தாண்டின் தொடக்கத்தை நம்பிக்கையோடு எதிர்கொள்ள வேண்டும்.

தினத்தந்தி

உறவுகளை வளர்த்துக்கொள்ள முடிவு செய்துகொள்ளலாம். பாலித்தீன் பை இனிமேல் பயன்படுத்தமாட்டேன் என்ற உறுதிமொழியை ஏற்கலாம். மழைநீரை சேமிக்க முயற்சிக்கலாம். போதை வாழ்வில் இருந்து என்னை மாற்றிக்கொள்வேன் என்ற நிலைப்பாட்டினை ஏற்கலாம். வீதியை சுத்தமாக வைத்துக்கொள்வேன். ஏரி, குளங்களை மாசுபடுத்தமாட்டேன் என்று தங்களுக்கு தாங்களாக முடிவு செய்வதுடன், பிறர் அவ்வாறு செய்ய அனுமதிக்காத நிலைப்பாட்டையும் எடுக்கலாம்.

புயல் காற்றுகள் மரங்களை பெயர்த்து போடலாம். மலைகளை அசைக்க முடியாது. புயலே அழிக்க முடியாத மலை வளங்களின் அழிவில் இருந்து பாதுகாப்போம். நமது முன்னோர்கள் மலைகளின் மீது கோவில்கள் கட்டினார்கள். மலைகளை பாதுகாத்தார்கள். ஆனால் இன்று கல்வி நிலையங்கள், தொழிற்சாலைகள் என்ற பெயரில் மலைகள் அனைத்தும் களவாடப்படுகின்றன. ஒரு மரம் வெட்டப்பட்டால் மீண்டும் சில ஆண்டுகளில் வளர்த்து எடுக்க முடியும். ஒரு மலை வெட்டப்பட்டால் எத்தனை யுகமானாலும் வளர்க்க முடியாது. மலை இயற்கை நமக்கு அளித்து இருக்கும் மிகப்பெரிய கொடை. மலையில் இருந்து பெரும் நீரூற்று காட்டாறாக வந்து வளம் தருகிறது. இன்னும் எத்தனையோ கொடைகளை தரும் மலைகளை காப்பது மக்களின் கடமை. மலைகள் மட்டுமல்ல இயற்கை தந்த ஆறுகள், குளங்கள், ஏரிகள், கண்மாய்கள், குட்டைகள் என ஒவ்வொன்றையும் பாதுகாக்க வேண்டும் என்று இந்த புத்தாண்டில் உறுதி ஏற்போம்.

-முடிவேல் மரியா

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்