மாவட்ட செய்திகள்

‘ரீபண்ட்’ பெறுவதில் இருந்த பிரச்சினைகளுக்கு தற்காலிக தீர்வு - ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி

‘ரீபண்ட்’ பெறுவதில் இருந்த பிரச்சினைகளுக்கு தற்காலிக தீர்வு கிடைத்துள்ளதால் தொழில்துறையினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தினத்தந்தி

திருப்பூர்,

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருப்பூரில் இருந்து சரக்குகள் துறைமுகங்கள் மூலமாக வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது. ஜி.எஸ்.டி. ரீபண்ட் பெறுவதற்கு துறைமுகங்களில் வழங்கப்படும் கேட் வே, இ.ஜி.எம். எண் கட்டயாம் என கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிடப்பட்டது. துறைமுகத்திற்கு நேரடியாக அனுப்பும் சரக்குகளுக்கு சுலபமாக கேட் வே, இ.ஜி.எம். கிடைத்து விடுகிறது. உள்ளூர் சரக்கு முனையத்தில் இருந்து அனுப்பும் போது வாகன எண்ணுடன் கூடிய இ.ஜி.எம். எண் வழங்கப்படுகிறது.

ஜி.எஸ்.டி. ரீபண்ட் பெறுவதற்கான ஆன்லைன் படிவத்தில், எழுத்துடன் கூடிய இ.ஜி.எம். எண்ணை பதிவு செய்ய முடியாது. கேட் வே, இ.ஜி.எம். எண் பெற்றுத்தான் ரீபண்ட் கேட்டு விண்ணப்பிக்க முடியும். ஆனால் துறைமுகங்களில் அனுப்பப்படும் சரக்குகளுக்கு இ.ஜி.எம். எண் பெற நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. இதனால் ஏற்றுமதியாளர்கள் ரீபண்ட் கேட்டு விண்ணப்பிக்க முடியாத நிலை இருந்து வந்தது.

இதனால் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில் ரீபண்ட் பெறுவதற்கு தற்காலிக தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும் என கோவை மத்திய ஜி.எஸ்.டி. கமிஷனர் சீனிவாசராவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் தொழில்துறையினரின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளது. அதன்படி துறைமுகங்களில் இருந்து அனுப்பும் சரக்குகளுக்கு ரீபண்ட் கேட்டு விண்ணப்பிக்கலாம். ஆனால் அதற்கான ரீபண்ட் தொகை விடுவிக்கப்படாது.

2 மாதங்களுக்குள் கேட் வே3, இ.ஜி.எம். எண் மற்றும் ஆவணங்களை சமர்ப்பித்து நிறுத்திவைக்கப்பட்ட ரீபண்ட் தொகையை பெற்றுக்கொள்ளலாம் என கோவை மத்திய ஜி.எஸ்.டி. கமிஷனரகம் அறிவித்துள்ளது. 2 மாதம் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால் எளிதாக ரீபண்ட் பெற முடியும். இதனால் தொழில்துறையினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். எனவே ஏற்றுமதியாளர்கள் இதனை பயன்படுத்திக்கொண்டு, ரீபண்ட் கேட்டு உடனே விண்ணப்பிக்க வேண்டும். 2 மாதத்திற்குள் கேட் வே, இ.ஜி.எம். எண் சமர்ப்பித்து தொகையை பெற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்