வாய்மேடு,
நாகைமாவட்டம் வாய்மேடு ஆரம்ப சுகாதாரநிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வர்த்த கசங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் வாய்மேடு-திருத்துறைப்பூண்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வாய்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கரிகாற்சோழன், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் சங்கர் கணேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமூக தீர்வு ஏற்பட்டதையடுத்து அவர்கள் சாலைமறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் வாய்மேடு-திருத்துறைப்பூண்டி சாலையில் மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.