மாவட்ட செய்திகள்

ஊரக உள்ளாட்சி தேர்தல்: ஊராட்சி ஒன்றியங்களுக்கு வாக்குச்சீட்டு அனுப்பி வைப்பு

திருப்பூர் மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர்களின் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நேற்று மாலை அறிவிக்கப்பட்டது.

தினத்தந்தி

திருப்பூர்,

வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து வாக்குசீட்டுகள் அந்தந்த ஒன்றியங்களுக்கு பிரித்து அனுப்பும் பணி நேற்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட கருவூலத்தில் பாதுகாப்புடன் இரும்பு பெட்டிகளில் வாக்குச்சீட்டு வைக்கப்பட்டு இருந்தன. அவை பலத்த பாதுகாப்புடன் அந்தந்த ஒன்றியங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டன. ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு பச்சை நிறத்திலும், ஊராட்சி தலைவர் பதவிக்கு ரோஸ் நிறத்திலும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு மஞ்சள் நிறத்திலும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு வெள்ளை நிறத்திலும் வாக்குச்சீட்டுகள் இருந்தன.

ஒவ்வொரு ஒன்றியத்தில் உள்ள அதிகாரிகள் வாக்குச்சீட்டுகளை பெற்று அரசால் அங்கீகரிக்கப்பட்ட அச்சகத்தில் கொடுத்து சின்னங்களுடன் கூடிய வேட்பாளர்களின் பெயர்களை அச்சடிக்க உள்ளனர்.

இதற்காக மாவட்டத்தில் 9 அச்சகங்கள் தயார் நிலையில் உள்ளன.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்