மாவட்ட செய்திகள்

சுரண்டை அருகே பள்ளி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு ஆசிரியர்களை நியமிக்க கோரிக்கை

சுரண்டை அருகே ஆசிரியர்களை நியமிக்க கோரி பள்ளி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

சுரண்டை,

சுரண்டை அருகே உள்ள வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பில் தமிழ், உயிரியல், வேதியியல், கணினி அறிவியல் ஆகிய பாடங்களுக்கு கடந்த ஆண்டு முதல் பாடம் நடத்த ஆசிரியர்கள் இல்லை என்று கூறப்படுகிறது.

இதை கண்டித்தும், ஆசிரியர்களை உடனடியாக நியமிக்க கோரியும் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ-மாணவிகள் நேற்று காலை 10.30 மணியளவில் திடீரென்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பள்ளி முன்பு அமர்ந்து கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வீரகேரளம்புதூர் தாசில்தார் ஹரிஹரன், பள்ளி தலைமை ஆசிரியை சாய்சுப்புலட்சுமி மற்றும் போலீசார் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆசிரியர்களை நியமிக்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று மாணவர்கள் கூறினர்.

இதையடுத்து தாசில்தார் ஹரிஹரன் மாணவ பிரதிநிதிகள் 2 பேரை மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்க அழைத்து சென்றார். அதன்பிறகு மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு வகுப்புகளுக்கு சென்றனர். இந்த போராட்டம் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்