தொழிலாளிக்கு கத்திக்குத்து 
மாவட்ட செய்திகள்

தொழிலாளிக்கு கத்திக்குத்து

தொழிலாளிக்கு கத்திக்குத்து

துடியலூர்

கோவை நல்லாம்பாளையம் பாலாஜி நகரை சேர்ந்தவர் வேணு கோபால் (வயது 35). தொழிலாளி. சம்பவத்தன்று இவர் அங்குள்ள டாஸ்மாக் மதுக்கடை முன்பு நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த அவரது நண்பர் சுதாகர், வேணுகோபாலிடம் பணம் கேட்டுள்ளார். இதனால் அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட் டது.

இதனால் ஆத்திரம் அடைந்த சுதாகர், தனது நண்பர்களான துடியலூரை சேர்ந்த கோபாலன், கோபிநாத் ஆகியோரை டாஸ்மாக் கடைக்கு வரவழைத்தார். பின்னர் கோபாலன் பிடித்துக் கொள்ள, கோபிநாத் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வேணுகோபாலை சரமாரியாக குத்தினார்.

இதில் படுகாயம் அடைந்த அவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து துடியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இபிஎப்ஓ சம்பள உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்கிறதா?

பெண்களுடன் தனிமையில் இருந்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது

மனைவிக்கு பதிலாக கணவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்