மாவட்ட செய்திகள்

டாஸ்மாக் பணியாளர்கள் கையெழுத்து இயக்கம்

டாஸ்மாக் பணியாளர்கள் பணி நிரந்தர செய்ய வலியுறுத்தி கையெழுத்து இயக்கத்தை திண்டுக்கல்லில் நடத்தினர்.

தினத்தந்தி

திண்டுக்கல்:

தமிழகம் முழுவதும் பணியாற்றும் டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மேலும் இ.எஸ்.ஐ. திட்டத்தில் அனைத்து ஊழியர்களுக்கும் மருத்துவ வசதி கிடைக்க செய்ய வேண்டும். சில்லறை மதுபான விற்பனையை முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் அந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் டாஸ்மாக் பணியாளர்கள், பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்துகின்றனர். அதன் இறுதியில் முதல்-அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பவும் முடிவு செய்துள்ளனர். அதன்படி நேற்று திண்டுக்கல்லில் டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் கையெழுத்து இயக்கத்தில் ஈடுபட்டனர்.

இதில் மாநில செயலாளர் ஆர்.மணிகண்டன் தலைமையில் மாவட்ட தலைவர் அருணாசலம், கவுரவ தலைவர் மணிகண்டன், செயலாளர் முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் டாஸ்மாக் கடைகளுக்கு சென்று பணியாளர்களிடம் கையெழுத்து பெற்றனர். அதேபோல் நகரில் பல்வேறு பகுதியில் பொதுமக்களிடமும் கையெழுத்து வாங்கினர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்