மாவட்ட செய்திகள்

சிவகாசி காங்கிரஸ் வேட்பாளர் அசோகன் கிராமப் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பு

சிவகாசி சட்டமன்ற தொகுதி யில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் அசோகன் கடந்த சில நாட்களாக தொகுதியின் பல்வேறு பகுதியில் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.

தினத்தந்தி

விருதுநகர்,

சிவகாசி நகராட்சிக்கு உட்பட்ட காயிதே மில்லத் தெரு, சர்க்கரை வாவாதெரு, சின்னப் பள்ளிவாசல்தெரு, ஓடைத் தெரு, மீரா உசேன் தெரு, தளவாய்புரம் வடக்கு தெரு, தளவாய்புரம் தெற்கு தெரு, வி.கே.எம்.தெரு. மருது பாண்டியர் மேட்டுத்தெரு, சுந்தரம் தெரு, மருது பாண்டியர் நடுதெரு, மருதுபாண்டியர் மடத்து தெரு, காத்தநாடார் தெரு, மாத்தி ஆகியஇடங்களில் வீடு, வீடாக சென்றுதீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது முன்னாள் நகர்மன்றதலைவர் சபையர் ஞானசேகரன், முன்னாள் கவுன்சிலர்கள் அரசன் ஜீ.வி.கார்த்தி,கணேசன், காளீஸ்வரன்,மாநிலமாணவர் அணி துணைத்தலைவர் சின்னதம்பி, ம.தி.மு.க.வை சேர்ந்த ராஜேஷ், தி.மு.க. நகர பொறுப்பாளர் காளிராஜ், கம்யூனிஸ்ட் கட்சிநகரதலைவர் முருகன், காங்கிரஸ் நகர தலைவர் குமரன், தகவல் உரிமை சட்டத்தின் மாநில துணை செயலாளர் மைக்கேல், திருத்தங்கல் தங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து மாலையில் சிவகாசி ஊராட்சி ஒன்றியத் துக்கு உட்பட்ட எஸ்.புதுப்பட்டி, மண்ணுக்கு மீண்டான்பட்டி, அருணாசலபுரம், பூவநாதபுரம், ஈஞ்சார், ஈஞ்சார் தேவர்சிலை, நடுவப்பட்டி, கிருஷ்ணபேரி, நிறைமதி, நாகலாபுரம், வடப்பட்டி புதூர், வடப்பட்டி கீழூர், வடப்பட்டி மேலூர், வெள்ளையாபுரம், கட்ட சின்னம்பட்டி, நமஸ்கரித்தான் பட்டி, சுக்கிரவார்பட்டி, கலுங்கோட்டை, அதிவீரன்பட்டி ஆகியஇடங்களில் திறந்த ஜீப்பில் நின்றவாறு வாக்கு சேகரித்தார். இரவு 9 மணிக்கு அதிவீரன் பட்டி கிராமத்தில் கூடி இருந்த பொது மக்கள் மத்தியில் காங்கிரஸ் வேட் பாளர் அசோகன் பேசிய தாவது:-

காங்கிரஸ் கட்சி சார்பில் நான் இந்த தொகுதியில் போட்டி யிடுகிறேன். ஏற்கனவே சிவகாசிநகராட்சி துணைத் தலைவராக பதவிவகித்த அனுபவம் எனக்கு இருக்கிறது. நான் நகர்மன்ற துணைத் தலைவராக இருந்த போது சிவகாசி நகராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்டங் களை கொண்டு வந்து செயல் படுத்தி மக்களிடம் பாராட்டு பெற்றுள்ளேன்.

தற்போது அந்த சாதனையை சிவகாசி சட்டமன்ற தொகுதி முழுவதும் செய்யஎனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. அதனால் நீங்கள்எனக்கு கை சின்னத்தில் வாக்களித்து என்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.நான் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப் பட்டபின்னர் இந்த பகுதிக்கு தேவையான அனைத்து பணிகளையும் செய்து கொடுப்பேன். என்னை தேடி வருபவர்களுக்கு என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வேன். இந்தகிராமத்தை சேர்ந்த 3 மாணவர்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கல்வி உதவிக்காக பஞ்சாயத்து துணைத்தலைவர் அதிவீரன் பட்டி செல்வம் சிபாரிசு மூலம் என்னை சந்தித்தார்கள். நான் அவர்களுக்கு கல்வி பயில என்னால் முடிந்த உதவிகளை செய்துள்ளேன். இவ்வாறு அவர் பேசினார்.

பிரச்சாரத்தின் தி.மு.க. ஒன்றிய செயலாளரும், சிவகாசி திமுக ஒன்றிய செயலாளர் விவேகன்ராஜ், மாணவரணி திலீபன்மஞ்சுநாத், ஒன்றிய கவுன்சிலர் கவிதா பிரவீன், பைபாஸ் வைரம், சாமுவேல் நாடார், கம்யூனிஸ்ட் கட்சி பாலசுப்பிரமணியம், பிரகாஷ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்