மாவட்ட செய்திகள்

தனியார் பயிற்சி மையங்களில் சிறப்பு வகுப்புகள் எடுத்தால் கடும் நடவடிக்கை கல்வித்துறை எச்சரிக்கை

புதுவை அரசு பள்ளி ஆசிரியர்கள் தனியார் பயிற்சி மையங்களில் சிறப்பு வகுப்புகள் எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தினத்தந்தி

புதுச்சேரி

புதுச்சேரி அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் சிலர் பள்ளி பணி நேரம் முடிந்த பின்னர் கல்வித்துறையின் விதிகளை மீறி தனியார் பள்ளிகள், தனியார் பயிற்சி மையங்கள் போன்றவற்றில் சிறப்பு வகுப்புகள் எடுப்பதாக கல்வித்துறைக்கு புகார்கள் வருகிறது.

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தனியாக டியூசன் சென்டர்கள், தனியார் பயிற்சி மையங்கள், தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் விதிமீறல்களைத் தடுக்க புதுவை கல்வித்துறை மற்றும் பள்ளி நிர்வாகங்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

ஆசிரியர்கள் விதிமுறைகளை மீறி தனியார் பயிற்சி மையங்களில் சிறப்பு வகுப்புகள் எடுப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக புதுவை அரசு முதன்மை கல்வி அதிகாரி மூலம் அனைத்து அரசு பள்ளி முதல்வர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்