உடுமலை,
உடுமலையை அடுத்துள்ள குறிஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 45). இவர் உடுமலையில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வருகிறார். இவரது இளைய மகள் அமுதா (16). இவர் உடுமலை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியான அமுதா எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்றார்.
ஆனால் தேர்வில் மிகக்குறைந்த மதிப்பெண்கள் பெற்றுள்ளோமே என்று மிகவும் மனவேதனையில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் மாலை வீட்டை விட்டு வெளியில் சென்றவர் நீண்டநேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரை உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடி பார்த்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை
அப்போது அவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தோட்டத்து பக்கம் நைலான் கயிற்றால் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் எஸ்..எஸ்.எல்.சி.தேர்வில் மதிப்பெண்கள் குறைந்ததால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. பள்ளி மாணவி தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால் தூக்குப்போட்டு தற்கொலைசெய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.