மாவட்ட செய்திகள்

திருச்சி பொன்மலையில் தலையில் கல்லை போட்டு சமையல்காரர் படுகொலை வாலிபர் போலீசில் சரண்

திருச்சி பொன்மலையில் தலையில் கல்லை போட்டு சமையல்காரர் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வாலிபர் போலீசில் சரண் அடைந்தார்.

தினத்தந்தி

பொன்மலைப்பட்டி,

திருச்சி பொன்மலை அடிவாரத்தை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 46). சமையல்காரர். இவருக்கு மனைவி, மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கொட்டப்பட்டு இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் சம்பத்குமார் (32).

இவர்கள் இருவரும் சேர்ந்து நேற்று மாலை பொன்மலை சூசையப்பர் தேவாலயம் அருகே சவுத் (டி) பகுதியில் உள்ள பாழடைந்த ரயில்வே குடியிருப்பில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது மது போதையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தலையில் கல்லை போட்டு கொலை

அப்போது கனகராஜை கீழே தள்ளிவிட்டு அருகில் கிடந்த கல்லை எடுத்து அவருடைய தலையில் போட்டு சம்பத்குமார் படுகொலை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் சம்பத்குமார் பொன்மலை போலீசில் சரண் அடைந்தார்.

இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கனகராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்த கொலை எதார்த்தமாக நடந்ததா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் நேற்று அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்