மாவட்ட செய்திகள்

பிளாஸ்டிக் பைகள் மீதான தடையை கண்டித்து கடையடைப்பு போராட்டம்

பிளாஸ்டிக் பைகள் மீதான தடையை கண்டித்து கடையடைப்பு போராட்டம் நடத்த வியாபாரிகள் திட்டமிட்டு வருகின்றனர்.

தினத்தந்தி

மும்பை,

மராட்டிய அரசு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் மாநிலத்தில் பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள், கரண்டிகள் என பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பல பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்தது.

இருப்பில் இருக்கும் அந்த பிளாஸ்டிக் பொருட்களை அகற்றுவதற்கு மாநில அரசு கொடுத்து உள்ள மூன்று மாத கால அவகாசம் இன்னும் சில தினங்களில் முடிகிறது. வருகிற 23-ந் தேதி முதல் மும்பையில் மேற்படி பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடையை முழுவதுமாக அமல்படுத்த மாநகராட்சி முடிவு செய்து உள்ளது.

இதன்பின்னர் பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மற்றும் வாங்குபவர்களுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் மாநகராட்சி எச்சரித்து உள்ளது.

இந்த நிலையில், மாநிலத்தில் பிளாஸ்டிக் தடைக்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதுபற்றி சில்லறை வியாபாரிகள் வெல்பர் அசோஷியேசன் தலைவர் விரன் ஷா கூறுகையில், பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதித்து உள்ள மராட்டிய அரசு அதற்கான மாற்று பயன்பாட்டை தெரிவிக்கவில்லை.

இது எங்களுக்கு பெரிய பிரச்சினையை ஏற்படுத்தும். சில்லறைக்கு வாங்கப்படும் எண்ணெய், சீனி, பருப்பு வகைகள், அரிசி உள்ளிட்ட பொருட்களை பேப்பர் பைகளில் கொடுப்பது சாத்தியமற்றது.

பிளாஸ்டிக் பைகள் மீது விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக வியாபாரிகள் சங்கங்கள் கூடி வருகிற 20-ந் தேதி விவாதிக்க உள்ளோம். இதில், பிளாஸ்டிக் பைகளுக்கு விதிக்கப்பட்ட தடையை கண்டித்து மாநிலம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்துவது பற்றி முடிவு செய்யப்படும் என்றார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்