மாவட்ட செய்திகள்

விருதுநகர் மாவட்டத்தில் 13 தாசில்தார்கள் திடீர் பணியிட மாற்றம்

விருதுநகர் மாவட்டத்தில் 13 தாசில்தார்களை பணி இடமாற்றம் செய்து கலெக்டர் கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.

தினத்தந்தி

தாசில்தார் மாற்றம்

இதுகுறித்து அவர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:- அருப்புக்கோட்டை வட்ட வழங்கல் அலுவலராக பணியாற்றும் சிவஜோதி, விருதுநகர் தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். விருதுநகர் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக ரமணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

விருதுநகர் ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் ரவீந்திரன் ஞானராஜ், அருப்புக்கோட்டை சமூக பாதுகாப்பு திட்டதனித் தாசில்தாராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சிவகாசி

சாத்தூர் தாசில்தார் சிவக்குமார், திருச்சுழிக்கு மாற்றப்பட்டுள்ளார். சிப்காட் நில எடுப்பு தாசில்தார் வி.சிவக்குமார், திருச்சுழி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக மாற்றப்பட்டுள்ளார்.

சிவகாசி நிலஎடுப்பு தாசில்தார் சந்திரசேகரன், காரியாபட்டி தாசில்தாராக மாற்றப்பட்டுள்ளார். சிவகாசி தாசில்தார் வெங்கடேசன், சாத்தூருக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

சமூக பாதுகாப்பு திட்டம்

சிவகாசி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ராஜாஉசேன், வெம்பக்கோட்டை தாசில்தாராக மாற்றப்பட்டுள்ளார். ராஜபாளையம் ரெங்கசாமி, வெம்பக்கோட்டை சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக மாற்றப்பட்டுள்ளார்.

வெம்பக்கோட்டையில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக பணியாற்றிய ரெங்கநாதன், ராஜபாளையம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.சாத்தூரில் பணியாற்றிய ராமசுப்பிரமணியன் சிவகாசிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

வத்திராயிருப்பு

டாஸ்மாக் உதவி மேலாளராக பணியாற்றிய விஜயலட்சுமி, சிவகாசி சமூக பாதுகாப்பு திட்டதாசில்தாராக அறிவிக்கப்பட்டு உள்ளார். வத்திராயிருப்பு ராமதாஸ், ஸ்ரீவில்லிபுத்தூர் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக மாற்றப்பட்டுள்ளார். சிவகாசி நகர நிலவரி அன்னம்மாள் வத்திராயிருப்பு தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்