மாவட்ட செய்திகள்

தானேயில் பரபரப்பு சுவரில் துளைபோட்டு நகைக்கடையில் கொள்ளை கும்பலுக்கு வலைவீச்சு

தானேயில் சுவரில் துளைப்போட்டு நகைக்கடையில் பல லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்த கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.

தினத்தந்தி

மும்பை,

தானே வர்தக் நகர் பகுதியில் நகைக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று காலை வழக்கம்போல் கடையை திறக்க உரிமையாளர் வந்தார். அவர் கடையின் கதவை திறந்த போது உள்ளே சென்றபோது அலமாரிகளில் நகைகள் வைக்கப்பட்டு இருந்த நகைபெட்டிகள் சிதறிகிடந்தன. மேலும் கடையில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதன்பேரில் நகைக்கடைக்கு போலீசார் விரைந்து சென்று கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

கொள்ளை நடந்த நகைக்கடைக்கு அருகில் கடை ஒன்று உள்ளது. அதை கடந்த சில மாதங்களுக்கான முன் கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் பழக்கடை நடத்தப்போவதாக வாடகைக்கு எடுத்து உள்ளனர். கடையை வாடகைக்கு கேட்பது கொள்ளை கும்பல் என்பது தெரியாமல் உரிமையாளர் அதை அவர்களுக்கு கொடுத்து உள்ளார்.

இந்தநிலையில் நேற்று அதிகாலை கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் நகைக்கடையின் சுவரில் துளைப்போட்டு உள்ளே நுழைந்து உள்ளனர். பின்னர் அவர்கள் கடையில் இருந்த பல லடம் மதிப்புள்ள தங்கநகைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பி ஓடிஉள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பிஓடிய கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.

மேலும் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மொத்த மதிப்பையும் கணக்கிடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்