மாவட்ட செய்திகள்

திருப்பூரில் வாகனம் மோதி ஆட்டோ டிரைவர் பலி; மனைவி படுகாயம்

திருப்பூரில் வாகனம் மோதி ஆட்டோ டிரைவர் பலியானார். அவருடைய மனைவி படுகாயம் அடைந்தார்.

தினத்தந்தி

திருப்பூர்,

விபத்துக்கு காரணமான வாகனத்தை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் சாலைமறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருப்பூர் தட்டான் தோட்டத்தை சேர்ந்தவர் ரங்கன்(வயது 57). ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி விஜயா(49). ரங்கனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று அதிகாலை ரங்கனும், விஜயாவும் தென்னம்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வெளியே வந்துள்ளனர். 3.30 மணி அளவில் மருத்துவமனையின் முன் பல்லடம் ரோட்டில் அவர்கள் நடந்து வந்தபோது அந்த வழியாக வந்த வாகனம் 2 பேர் மீதும் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டதாக தெரிகிறது.

சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்துள்ளனர். இதில் ரங்கன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார். விஜயா பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனடியாக விஜயாவை மீட்டு திருப்பூர் மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருப்பூர் தெற்கு போலீசார் ரங்கனின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், கணவன், மனைவி மீது மோதிய வாகனத்தின் அடையாளம் கண்டறிய முடியவில்லை. இதனால் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்தநிலையில் நேற்று மாலை அரசு ஆஸ்பத்திரியில் ரங்கனின் உறவினர்கள் திரண்டனர். விபத்துக்கு காரணமான வாகனத்தை அடையாளம் கண்டு சம்பந்தப்பட்ட டிரைவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கூறி 4.30 மணி அளவில் அரசு ஆஸ்பத்திரி முன் உள்ள தாராபுரம் ரோட்டில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதன்காரணமாக அந்த ரோட்டில் வாகன போக்குவரத்து தடைபட்டது.

சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் மாநகர போலீஸ் துணை கமிஷனர் கயல்விழி, உதவி கமிஷனர்கள் தங்கவேல், அண்ணாத்துரை, ராஜ்கண்ணா மற்றும் போலீசார் வந்து சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். சம்பவ இடத்தில் கண்காணிப்பு கேமரா எதுவும் இல்லாததால் விபத்துக்கு காரணமான வாகனத்தை கண்டறிவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் சம்பந்தப்பட்ட வாகனத்தை அடையாளம் கண்டு டிரைவர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர்.

இதைத்தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதன்காரணமாக மணி நேரம் தாராபுரம் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்