மும்பை,
மும்பையில் மின்சார ரெயில் போக்குவரத்து மக்களின் உயிர் நாடியாக உள்ளது. தினமும் 80 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் மும்பையில் மின்சார மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பயணம் செய்கின்றனர். பயணிகள் கூட்டம் காரணமாக ரெயில் நிலையங்கள், ரெயில்கள் மூலமாக கொரோனா வைரஸ் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே ரெயில் பயணிகள் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மேற்கு ரெயில்வே தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதேபோல மத்திய, மேற்கு ரெயில்வே சார்பில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மற்றும் சுமார் 200 மின்சார ரெயில்கள் தினமும் சுத்தம் செய்யப்பட்டு அதில் கிருமி நாசினிகள் தெளிக்கப்படுகின்றன. வழக்கமாக ரெயில்கள் 18 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீரால் கழுவப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.