மாவட்ட செய்திகள்

மராட்டிய சட்டசபை கூட்டம் 19-ந் தேதி தொடங்குகிறது

மராட்டிய சட்டசபை கூட்டம் வருகிற 19-ந்தேதி தொடங்கி நடக்கிறது. கூடுதல் நாட்கள் கூட்டத் தொடரை நடத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.

தினத்தந்தி

மும்பை,

மராட்டிய சட்டசபை குளிர்கால கூட்டத் தொடர் வழக்கமாக நாக்பூரில் நடைபெறும். ஆனால் 57 வருடங்களுக்கு பிறகு இந்த ஆண்டு குளிர்கால கூட்டத் தொடர் மும்பையில் நடைபெற உள்ளது.

இந்த கூட்டம் வருகிற 19-ந் தேதி தொடங்குகிறது. 30-ந் தேதி நிறைவுபெறுகிறது.

இந்த தகவலை சட்டசபை செயலாளர் அறிவித்து உள்ளார்.

2 வாரத்துக்கும் குறைவாக சட்டசபை கூட்டம் நடைபெறுவதாக விமர்சித்துள்ள எதிர்க்கட்சியினர், கூட்டத் தொடரை மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ராதாகிருஷ்ண விகே பாட்டீல் (காங்கிரஸ்) நிருபர்களிடம் கூறியதாவது:-

மாநிலத்தில் வறட்சி நிலவுகிறது. மேலும் விவசாயிகள் பிரச்சினை, மராத்தா, தங்கர், முஸ்லிம் மக்களுக்கு வழங்க வேண்டிய இடஒதுக்கீடு, மும்பை வளர்ச்சி திட்டம் உள்பட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் தலைதூக்கி உள்ளன. இந்த பிரச்சினைகள் குறித்து சட்டசபையில் விரிவாக விவாதிக்க வேண்டும். ஆனால் முக்கிய பிரச்சினைகளில் இருந்து தப்பித்து கொள்ளும் நோக்கில் சட்டசபை கூட்டத்தை குறுகிய காலத்துக்குள் முடித்து கொள்ள பா.ஜனதா தலைமையிலான அரசு திட்டமிட்டு உள்ளது.

முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டியதிருப்பதால் மேலும் ஒரு வாரத்துக்கு கூட்டத் தொடரை நடத்த வேண்டும் என்று சட்டசபை அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் நாங்கள் வலியுறுத்தினோம். ஆனால் எங்களது கோரிக்கைநிராகரிக்கப்பட்டது. எங்களது கோரிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேகோரிக்கையை மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் தனஞ்செய் முண்டேவும் (தேசியவாத காங்கிரஸ்) வலியுறுத்தி உள்ளார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்