தானே,
தானே மாவட்டம் உல்லாஸ்நகரை சேர்ந்த 50 வயது பெண் கடந்த ஜூன் மாதம் 23-ந்தேதி இரவு வேலை முடிந்து தனியாக நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது, அங்கு வந்த மர்மநபர் ஒருவர் அந்த பெண்ணை ஆள்நடமாட்டம் இல்லாத இடத்துக்கு துக்கிச்சென்று மிரட்டி கற்பழித்தார்.
இந்த சம்பவம் குறித்து பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சம்பவம் நடந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை வைத்து சந்தேகத்துக்குரிய நபர்களை பிடித்து விசாரித்து வந்தனர்.
இந்தநிலையில் அதே பகுதியை சேர்ந்த லங்கன் தேவ்கர்(வயது48) என்பவரை போலீசார் சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தார். மேலும் அவரது மார்பில் யாரோ கடித்த பல் தடங்கள் இருந்தன.
இதையடுத்து போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது, அவர் தனியாக நடந்து சென்ற பெண்ணை தூக்கிச்சென்று மிரட்டி கற்பழித்ததை ஒப்புக்கொண்டார்.
மேலும் பாதிக்கப்பட்ட பெண் லங்கன் தேவ்கரி டம் இருந்து தப்பிக்க அவரை கடித்து காயப்படுத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் லங்கன் தேவ்கரை கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்ற னர்.