மாவட்ட செய்திகள்

கள்ளக்காதலியை கழுத்தை அறுத்து கொன்ற வாலிபர் கைது

கோரேகாவில் வீட்டில் தனியாக இருந்த கள்ளக்காதலியை கழுத்தை அறுத்து கொன்ற வாலிபரை போலீசார் உத்தரபிரதேசத்தில் வைத்து கைது செய்தனர்.

தினத்தந்தி

மும்பை,

மும்பை கோரேகாவ் மேற்கில் உள்ள பிரேம் நகர் குடிசை பகுதியை சேர்ந்தவர் ஜெக்தீஸ். இவரது மனைவி குடியா நிஷாத் (வயது31). கடந்த சில தினங்களுக்கு முன் இவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

இந்த நிலையில் கொலை நடந்த அன்று முதல் அதே பகுதியில் வசித்து வந்த தேஜ்பகதூர் (27) என்ற வாலிபர் மாயமானது தெரியவந்தது. எனவே சந்தேகம் அடைந்த போலீசார் அவரை வலைவீசி தேடினர். இதில் அவர் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று தேஜ்பகதூரை பிடித்தனர். விசாரணையில் அவர் தான் குடியா நிஷாத்தை கொலை செய்தது தெரியவந்தது. கொலை தொடர்பாக திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.

அதாவது, தேஜ்பகதூருக்கும், குடியா நிஷாத்துக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு பெண்ணுடனும் தேஜ்பகதூருக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. இதை அறிந்த குடியா நிஷாத், தேஜ்பகதூரிடம் சண்டையிட்டார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று தேஜ்பகதூர், குடியா நிஷாத்தை சமாதானப்படுத்த அவரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது கோபத்தில் குடியா நிஷாத் அவருடைய கழுத்தை நெரித்ததாக தெரிகிறது. இதனால் அத்திரமடைந்த தேஜ்பகதூர் அருகில் இருந்த கத்தியை எடுத்து அவரை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவர் விசாரணைக்காக மும்பை கொண்டு வரப்பட்டார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்