மாவட்ட செய்திகள்

ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் ராக்கிங் செய்த 3 மாணவர்கள் கைது

ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் ராக்கிங் செய்த 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அரசு கலைக்கல்லூரி உள்ளது. இங்கு இளங்கலை, முதுகலை பாடப் பிரிவுகளில் 3 ஆயிரத்து 700-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இளங்கலை விலங்கியல் துறையில் 2-ம் ஆண்டு படித்து வரும் மாணவர்களான அனிஷ் மைக்கேல், சுஜித்குமார், சிவக்குமார் ஆகிய 3 பேரும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு, அதே துறையில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் சிலரை ராக்கிங் செய்து உள்ளனர்.

இது குறித்த புகாரின் பேரில், கல்லூரி முதல்வர் தலைமையில் இயங்கும் ராக்கிங் தடுப்புக்குழு விசாரணை நடத்தியது. இதில் கல்லூரி மாணவர்கள் 3 பேரும் சேர்ந்து ராக்கிங் செய்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து, அந்த 3 மாணவர்களையும் கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் (சஸ்பெண்ட்) செய்து உத்தர விட்டது.

மேலும் ராக்கிங் குறித்து கல்லூரி முதல்வர் ஈஸ்வரமூர்த்தி ஊட்டி நகர மத்திய போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் ராக்கிங் செய்த மாணவர்கள் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

அரசு கலைக்கல்லூரியில் ராக்கிங் செய்த 3 மாணவர்களை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப் பை ஏற்படுத்தி உள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்