மாவட்ட செய்திகள்

தியாகதுருகம் அருகே: வாகனம் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி

தியாகதுருகம் அருகே வாகனம் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.

கண்டாச்சிமங்கலம்,

தியாகதுருகம் அருகே உள்ள சின்னமாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜவன்னியர் மகன் மணிமாறன்(வயது 30). இவருடைய மனைவி சுதா. இவர்களுக்கு 2 மகள்கள், 1 மகன் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மணிமாறன் தனது மோட்டார் சைக்கிளில் சொந்தவேலை காரணமாக கள்ளக்குறிச்சி சென்றார். பின்னர் அங்கு வேலையை முடித்து விட்டு அதே மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். மாடூரில் உள்ள திருமண மண்டபம் அருகே வந்தபோது முன்னாள் சென்று கொண்டிருந்த ஏதோ ஒரு வாகனம் மீது மணிமாறன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது.

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த மணிமாறன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த தியாகதுருகம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்து குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் விபத்தில் பலியான மணிமாறனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண்களுடன் தனிமையில் இருந்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது

மனைவிக்கு பதிலாக கணவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு