மாவட்ட செய்திகள்

தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகை படிப்படியாக வழங்கப்படும் - முதல்-மந்திரி எடியூரப்பா தகவல்

தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகை படிப் படியாக வழங்கப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்தார்.

தினத்தந்தி

பெங்களூரு,

முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் மேல்-சபை ஆசிரியர் மற்றும் பட்டதாரி தொகுதி எம்.எல்.சி.க்களின் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில், கல்வித்துறை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

இதில் பேசிய எம்.எல்.சி.க்கள், கர்நாடகத்தில் அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளுக்கு கல்வி உரிமை சட்டத்தின் கீழ் அரசு வழங்க வேண்டிய கட்டணத்தை உடனே விடுவிக்க வேண்டும்.

தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், சம்பளம் கிடைக்காமல் கஷ்டப்படுகிறார்கள். அவர்களுக்கும் உதவி தொகுப்பை அறிவிக்க வேண்டும். இந்த தனியார் பள்ளிகளுக்கு வட்டி இல்லா கடன் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

கூட்டத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா பேசியதாவது:-

தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை படிப்படியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கும்படி உத்தரவிடப்படும். ஏழை ஆசிரியர்களுக்கு உணவு தானியங்கள் வழங்க உத்தரவிடப்படும். மீதமுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்