மாவட்ட செய்திகள்

மாவட்டத்தில் கொரோனாவுக்கு மூதாட்டி பலி பலியானோர் எண்ணிக்கை 114 ஆக உயர்வு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மூதாட்டி பலியானார். இதையடுத்து, பலியானோரின் எண்ணிக்கை 114 ஆக உயர்ந்துள்ளது.

தினத்தந்தி

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு, நாள் குறைந்து வருகிறது. இதனிடையே கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த 62 வயதுடைய மூதாட்டி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். அவர் கடந்த 6-ந் தேதி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சளி, ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. இதில் அந்த மூதாட்டிக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த மூதாட்டிக்கு கொரோனா சிறப்பு வார்டில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனிடையே தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அந்த மூதாட்டி பலியானார். இவரையும் சேர்த்து மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 114 ஆக உயர்ந்துள்ளது.

இந்தநிலையில் மாவட்டத்தில் நேற்று 14 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டது. அவர்கள் கிருஷ்ணகிரி, ஓசூர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 7 ஆயிரத்து 554 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 7 ஆயிரத்து 278 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 162 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்