மாவட்ட செய்திகள்

வேதாரண்யத்தில் ஒப்பந்தக்காரரிடம் ரூ.73 ஆயிரம் வழிப்பறி மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

வேதாரண்யத்தில் ஒப்பந்தக்காரரிடம் ரூ.73 ஆயிரம் வழிப்பறி செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

தினத்தந்தி

வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள முதலியார்தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் வீரமுத்து. இவர் வேதாரண்யம் நகராட்சியின் முன்னாள் கவுன்சிலர். தற்போது ஒரு தனியார் உப்பு நிறுவனத்தில் ஒப்பந்தக்காரராக உள்ளார். சம்பவத்தன்று இவர் வேதாரண்யம் பகுதியில் உள்ள ஒரு வங்கிக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் வந்தார்.

அப்போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் அவரை பின்தொடர்ந்து வந்தனர். அவர்கள் வீரமுத்துவின் மோட்டார் சைக்கிளில் மாட்டி இருந்த பையை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர். அந்த பையில் ரூ.73 ஆயிரம் இருந்தது. இதுகுறித்து வேதாரண்யம் போலீசில் வீரமுத்து புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் பணத்தை வழிப்பறி செய்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

கண்காணிப்பு கேமரா

மர்ம நபர்கள் வீரமுத்துவிடம் பணத்தை பறித்து சென்ற காட்சிகள் வேதாரண்யம் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ளன. அந்த காட்சிகளை அடிப்படையாக கொண்டு போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்