மாவட்ட செய்திகள்

பேரிடர் மேலாண்மை குறித்த பயிற்சி

பழனி தாலுகா அலுவலகத்தில் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு பேரிடர் மேலாண்மை குறித்து செயல்விளக்க பயிற்சி நடந்தது.

தினத்தந்தி

பழனி:

பழனி தாலுகா அலுவலகத்தில் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு பேரிடர் மேலாண்மை குறித்த செயல்விளக்க பயிற்சி நேற்று நடைபெற்றது. இதற்கு பழனி தீயணைப்பு நிலைய அலுவலர் கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். பயிற்சியில், மழை, வெள்ளம், புயல், கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது, அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது மற்றும் பேரிடர் காலத்தில் பின்பற்ற வேண்டிய முறைகள் என்பது குறித்த செயல்விளக்க முறைகள் எடுத்துரைக்கப்பட்டது. பயிற்சியில் வருவாய்த்துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

பின்னர் இதுகுறித்து தீயணைப்பு நிலைய அலுவலர் கூறுகையில், வடகிழக்கு பருவமழை சில வாரங்களில் தொடங்க உள்ளது. இதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் மேலாண்மை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது வருவாய்த்துறை அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது என்றார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்