மாவட்ட செய்திகள்

பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 23-ந்தேதி புதுவை வருகை

பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வருகிற 23-ந்தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் புதுச்சேரி வருகிறார்.

தினத்தந்தி

புதுச்சேரி,
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் காலாப்பட்டில் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் 27-வது பட்டமளிப்பு விழா வருகிற 23-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இதில் கலந்து கொண்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார்.

விழாவில் புதுவை கவர்னர் கிரண்பெடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் ஷாஜகான், கமலக்கண்ணன், எம்.பி.க்கள் கோகுலகிருஷ்ணன், வைத்திலிங்கம், புதுவை மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மித் சிங் உள்பட பலர் கலந்துகொள்கிறார்கள்.

இந்த தகவலை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் சித்ரா தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்