மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி கலெக்டராக வெங்கடேஷ் பொறுப்பேற்பு குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை

தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக என்.வெங்கடேஷ் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

தினத்தந்தி

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த ரவிகுமார் சென்னை சர்வே மற்றும் செட்டில்மெண்ட் இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளார். இதைத் தொடர்ந்து சென்னை நிதித்துறை துணை செயலாளராக பணியாற்றி வந்த என்.வெங்கடேஷ் தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அவர் நேற்று காலை தூத்துக்குடி மாவட்டத்தின் 24-வது கலெக்டராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர் ஆந்திர மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர். கடந்த 2009-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்ச்சி பெற்றார். 2010-ம் ஆண்டு மதுரை உதவி கலெக்டர் (பயிற்சி), 2011-ம் ஆண்டு நாகர்கோவில் உதவி கலெக்டராகவும், 2012-ம் ஆண்டு கோவை கூடுதல் கலெக்டராகவும் பணியாற்றி உள்ளார். 2013-ம் ஆண்டு முதல் சென்னை நிதித்துறை துணை செயலாளராகவும், பட்ஜெட்டுக்கான நிதித்துறை துணை செயலாளராகவும் பணியாற்றி உள்ளார். இவர் 2015-16, 2016-17 ஆகிய ஆண்டுகளில் தமிழ்நாடு பட்ஜெட்டை தயாரித்து உளளார். தற்போது தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்று உள்ளார்.

குடிநீர் பிரச்சினை

இதுகுறித்து கலெக்டர் என்.வெங்கடேஷ் நிருபர்களிடம் கூறும் போது, குடிநீர் பிரச்சினை தற்போது முக்கியமான பிரச்சினையாக உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் என்னென்ன நீர் ஆதாரங்கள் உள்ளன. அதனை எப்படி முறையாக பயன்படுத்துவது, புதிதாக நீர் ஆதாரங்கள் எங்கெங்கு உருவாக்க வேண்டும் என்பது குறித்து ஆய்வு செய்து, குடிநீர் பிரச்சினை முற்றிலும் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்