மாவட்ட செய்திகள்

மின்னணு எந்திரங்களில் வாக்குப்பதிவு சரிபார்த்தல் பணி - கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி ஆய்வு

பாராளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வாக்குப்பதிவு சரிபார்த்தல் பணியை கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி ஆய்வு செய்தார்.

தினத்தந்தி

நல்லூர்,

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருப்பூர் வடக்கு, தெற்கு, பல்லடம், அவினாசி, காங்கேயம், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளில், பாராளுமன்ற தேர்தலின் போது பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் பெங்களூரு பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் இருந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் பெறப்பட்டது.

இதன் பின்னர் பல்லடம் மற்றும் திருப்பூர் தெற்கு தாசில்தார் அலுவலகங்களில் உள்ள கிடங்குகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

பல்லடம் மற்றும் திருப்பூர் தெற்கு தாசில்தார் அலுவலக கிடங்குகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு வருகிறது.

அதன்படி பெங்களூரை சேர்ந்த பாரத் எலக்ட்ரானிக் நிறுவன என்ஜினீயர்களால் முதல்நிலை சரிபார்ப்பு பணி முடிக்கப்பட்டு, மாதிரி வாக்குப்பதிவு திருப்பூர் தெற்கு தாசில்தார் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.

இதில் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி ஆய்வு செய்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்னா ராமசாமி, திருப்பூர் சப்-கலெக்டர் ஷ்ரவன் குமார், உதவி ஆணையார் (கலால்) சக்திவேலு, தேர்தல் தாசில்தார் முருகதாஸ், திருப்பூர் (தெற்கு) தாசில்தார் ரவிசந்திரன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்