புதுடெல்லி
லடாக் எல்லையில் சீன ராணுவம் உடனான மோதலில் ராணுவ அதிகாரி உட்பட இந்திய 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த செய்தி தொடர்பாளர் ஆனந்த் சர்மா கூறுகையில் இந்த சம்பவம் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருப்பதால் இது மிகவும் கவலைக்குரியது. மத்திய அரசு உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி கள நிலவரம் குறித்து சுருக்கமாக விளக்கம் அளிக்க வேண்டும் என நாங்கள் கேட்டுக் கொள்கிறோம் எனக் கூறினார்.