பெங்களூரு,
பெங்களூரு தலகட்டபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பையனபுரா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து சூதாட்டம் நடப்பதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அந்த வீட்டிற்கு சென்று போலீசார் பார்த்தனர்.
அப்போது அங்கு தொலைக்காட்சியில் கிரிக்கெட் பார்த்தபடியே ஒருவர் செல்போன் மூலம் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டார். அவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் அவரது பெயர் புருஷோத்தம் (வயது 32) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து ரூ.4 லட்சம் ரொக்கம், ஒரு செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான புருஷோத்தம் மீது தலகட்டபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
இதுபோல பானசாவடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட எச்.எஸ்.ஆர். லே-அவுட் 2-வது பிளாக்கில் ஐ.பி.எல். போட்டிகளை மையமாக வைத்து கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட இம்ரான்(46) என்பவரை பானசாவடி போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.86 ஆயிரம் ரொக்கம், ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.