தேசிய செய்திகள்

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

நாட்டில் வேலைவாய்ப்பு தலைமுறை அதிகரித்து, வேலையின்மை விகிதம் குறைந்து வருகிறது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது வேலைவாய்ப்பு தொடர்பாக உறுப்பினர்களின் துணைக்கேள்விகளுக்கு மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா பதிலளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கு அதிக முன்னுரிமை அளிக்கும் அரசின் உறுதிப்பாட்டை நிறைவேற்றுவதற்கான பணிகளில் வேலைவாய்ப்பு முகாம்களும் ஒன்றாகும். மாநில அரசுகள், அமைச்சகங்கள் மற்றும் துறைகளால் பல்வேறு திட்டங்களின் கீழ் வழக்கமான வேலைவாய்ப்பு கண்காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் கடந்த ஓராண்டில் ஒட்டுமொத்தமாக 18 ஆயிரத்துக்கு மேற்பட்ட வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இதில் நாடு முழுவதும் மொத்தம் 2.22 கோடி பேருக்கு வேலை வழங்கப்பட்டு உள்ளன. நாட்டில் வேலைவாய்ப்பு தலைமுறை அதிகரித்து, வேலையின்மை விகிதம் (3.2 சதவீதம்) குறைந்து வருகிறது.

மத்திய அரசு இதுவரை 18 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி 11.49 லட்சம் வேலைகள் அரசு துறைகளில் வழங்கப்பட்டு உள்ளன. மேலும் வேலைவாய்ப்பை வழங்குவதற்கான ஒரே தளமாக தேசிய தொழில் சேவை இணையதளத்தை அரசு உருவாக்கியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இந்த தளம் வலுவாக மாறியுள்ளது.

மேலும் 55 லட்சம் நிறுவனங்கள் இதில் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் அனைத்து மாநில அரசு தளங்களும் இணைக்கப்பட்டுள்ளன.அத்துடன் 6 கோடிக்கு அதிகமான வேலை தேடும் இளைஞர்கள் கடந்த 10 ஆண்டுகளில் இந்த இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

இபிஎப்ஓ சம்பள உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்கிறதா?

பெண்களுடன் தனிமையில் இருந்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது

மனைவிக்கு பதிலாக கணவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்