தேசிய செய்திகள்

காஷ்மீரில் 30 கிலோ எடை கொண்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு பறிமுதல்

ஜம்மு மற்றும் காஷ்மீரில் 30 கிலோ எடை கொண்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்றை போலீசார் கைப்பற்றி செயலிழக்க செய்துள்ளனர்.

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கிடைத்த உளவு தகவல் அடிப்படையில், பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் மண்டல போலீசார் இணைந்து தீவிர சோதனை நடத்தினர்.

இதில், சர்குலர் சாலையில் தஹாப் பகுதியருகே 25 கிலோ முதல் 30 கிலோ எடை கொண்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்றை போலீசார் கைப்பற்றினர். பின்னர் அதனை செயலிழக்க செய்ய கொண்டு சென்றுள்ளனர்.

நாட்டில் சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் தயாராகி வருகின்றன. இதனை தொடர்ந்து காஷ்மீரின் ரெயில் மற்றும் பேருந்து நிலையங்களில் பயணிகளிடம் சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இதுதவிர, சிறப்பு மோப்ப நாய் குழுவும் வரவழைக்கப்பட்டு உள்ளது. அரசு ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படை உள்ளிட்டோர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. பயணிகளிடம் பரிசோதனை செய்த பின்னரே வெளியே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

காஷ்மீரில் கைப்பற்றப்பட்ட 30 கிலோ எடை கொண்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு தனியான ஒரு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு, பாதுகாப்புடன் செயலிழக்க செய்யப்பட்டது.

பெண்களுடன் தனிமையில் இருந்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது

மனைவிக்கு பதிலாக கணவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு