தேசிய செய்திகள்

மாநிலங்களிடம் 94 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பு - மத்திய அரசு தகவல்

இந்தியாவில் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

தினத்தந்தி

புதுடெல்லி,

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணிகள் நாடு முழுவதும் மிகவும் வேகமாக நடந்து வருகிறது. இதில் திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை கடந்த 21-ந்தேதி அமல்படுத்திய மத்திய அரசு, இந்த பணிகளை மேலும் முடுக்கி விட்டுள்ளது.

இந்நிலையில், மாநிலங்களிடம் 94 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில்,

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசின் சார்பில் இலவசமாக இதுவரை 57 கோடியே 88 லட்சத்து 90 ஆயிரத்து 150 கொரோனா தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. அதில், 55,11,64,635 கொரோனா தடுப்பூசிகள் இதுவரை உபயோகிக்கப்பட்டுள்ளது.

தற்பேது 94 லட்சத்து 03 ஆயிரத்து 637 தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கையிருப்பில் உள்ளன. மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தொகுப்பில் இருந்து கூடுதலாக 18,62,530 தடுப்பூசிகளை அனுப்பப்பட்டுள்ளன.

மேலும், நாடு முழுவதும் 56,06,52,030 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 55,05,075 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்