தேசிய செய்திகள்

பாஜக ஆதரவுடன் முதல் மந்திரியானார் நிதிஷ் குமார், சரத் யாதவ் அதிருப்தி?

பாரதீய ஜனதா கட்சி ஆதரவுடன் நிதிஷ் குமார் முதல் மந்திரியாக பதவியேற்றுக்கொண்டதில் சரத் யாதவிற்கு உடன்பாடு இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

தினத்தந்தி

பாட்னா,

ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியினுடனான கருத்து வேறுபாட்டால் நேற்று முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்த நிதிஷ் குமார், பாரதீய ஜனதா ஆதரவுடன் இன்று மீண்டும் முதல் அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். பாஜக ஆதரவுடன் நிதிஷ் குமார் முதல் மந்திரியாக பதவியேற்றதில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் சரத் யாதவுக்கு உடன்பாடு இல்லை என கூறப்படுகிறது.

நிதிஷ் குமார் நேற்று தனது முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்தது முதல் சரத் யாதவ், தற்போது வரை எந்த கருத்தையும் கூறாமல் மவுனம் காத்து வருகிறார். இன்று ஆறாவது முறையாக முதல் மந்திரியாக நிதிஷ் குமார் பொறுப்பேற்ற விழாவிலும் சரத் யாதவ் கலந்து கொள்ள வில்லை. இதன் காரணமாக சரத் யாவ், நிதிஷ் குமாரின் முடிவால் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்