தேசிய செய்திகள்

இந்தியாவிலேயே அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட தேயிலை - ஒரு கிலோ இவ்வளவு விலையா?

இந்தியாவில் அதிக விலை கொடுத்து ஏலம் எடுக்கப்பட்ட ஒருகிலோ தேயிலை எவ்வளவு ரூபாய் தெரியுமா?

தினத்தந்தி

கவுகாத்தி,

இந்தியாவில் அதிக விலை கொடுத்து ஒரு கிலோ தேயிலை ஏலம் ஏலம் எடுக்கப்பட்ட சம்பவம் அசாமில் அரங்கேறியுள்ளது. அசாம் மாநிலத்தில் பிரபலமான மனோகரி தேயிலை தோட்டம் உள்ளது. இந்த தேயிலை தோட்டத்தில் பயிரிடப்படும் தேயிலைக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது.

இதற்கிடையில், மனோகரி தேயிலை தோட்டத்தில் பயிரிடப்பட்ட மனோகரி கோல்டு ரக தேயிலை நேற்று கவுகாத்தி தேயிலை ஏல மையத்தில் ஏலம் விடப்பட்டது. அப்போது, மனோகரி கோல்டு ரக தேயிலையை கிலோ ஒன்றுக்கு 99,999 ரூபாய்க்கு சவுரப் தேயிலை வியாபாரம் என்ற நிறுவனம் எடுத்துள்ளது.

நாட்டிலேயே அதிகபட்சமாக ஒரு கிலோ தேயிலை 99,999 ரூபாய் என்ற அளவில் ஏலம் எடுக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

இதற்கு முன்னதாக ஒருகிலோ தேயிலை அதிகபட்சமாக 75,000 ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்