பெங்களூரு,
பெங்களூரு கன்டோன்மெண்ட்- அகர்தலா இடையே இயக்கப்பட உள்ள சிறப்பு ரெயில்கள் குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது;-
திரிபுரா மாநிலம் அகர்தலாவில் இருந்து பெங்களூரு கன்டோன்மெண்டிற்கு வருகிற 31-ந் தேதி முதல் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் அதிவிரைவு சிறப்பு எக்ஸ்பிரஸ் (05488) இயக்கப்பட உள்ளது. மறுமார்க்கமாக அடுத்த மாதம் (ஆகஸ்டு) 3-ந் தேதி முதல் செவ்வாய்க்கிழமைகளில் பெங்களூரு கன்டோன்மெண்டில் இருந்து அகர்தலாவுக்கு ரெயில் புறப்பட்டு செல்கிறது.
இந்த ரெயில்கள் இருமார்க்கமாகவும் அம்பசா, தர்மாநகர், நியூ கரீம்கஞ்ச், பதர்பூர், நியூ ஹால்ப்லாங், கவுகாத்தி, காமக்யா, நியூ போங்கேகான், நியூ ஜல்பைகுரி, கிஷன் கஞ்ச், மல்டா டவுன், ராம்பூர் ஹால்ட், தன்குனி, அன்டூல், கரக்பூர், பத்ராக், கட்டாக், புவனேஸ்வர், குர்தா ரோடு, பெர்கம்பூர், பால்சா, ஸ்ரீகாகுளம் ரோடு, விழியநகரம், விசாகப்பட்டினம், விஜயவாடா, பெரம்பூர், காட்பாடி, ஒயிட்பீல்டு ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.