தேசிய செய்திகள்

சந்திரயான்–2 தள்ளிவைப்பு மத்திய மந்திரியிடம் இஸ்ரோ தலைவர் விளக்கம்

நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்–1 விண்கலத்தை கடந்த 2008–ம் ஆண்டு இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) அனுப்பியது.

தினத்தந்தி

புதுடெல்லி,

சந்திரயான்2 விண்கலத்தை அதன் தொடர்ச்சியாக இஸ்ரோ தயாரித்து உள்ளது. இது இந்த மாதம் இறுதியில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் சந்திரயான்2 விண்கலத்தில் நிலவின் மேற்பரப்பில் இறங்கி ஆய்வு செய்வதற்காக ரோவர் கருவி ஒன்றும் இணைக்கப்பட்டு உள்ளது. இஸ்ரோ வரலாற்றில் முதன் முதலாக இந்த திட்டம் மேற்கொள்ளப்படுவதால் விண்கலத்தை ஏவுமுன் சில கூடுதல் பரிசோதனைகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது.

இதற்காக சந்திரயான்2 விண்கலத்தை ஏவும் திட்டம் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. அதன்படி அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் இந்த விண்கலம் ஏவப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கான மொத்த செலவு ரூ.800 கோடி ஆகும். இதை வெளிநாட்டில் இருந்து ஏவினால் இந்த தொகை இரு மடங்காக செலவாகும்.

இந்த விவரங்களை மத்திய விண்வெளித்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங்கிகை நேற்று சந்தித்து இஸ்ரோ தலைவர் சிவன் எடுத்துரைத்தார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்