தேசிய செய்திகள்

இந்தியாவில் குறைந்து வருகிறது கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் ஒரே நாளில் 12,514 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

தினத்தந்தி

புதுடெல்லி,

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும் இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளன. இதுவரை உலக அளவில் 24.74 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் 14,313 ஆக இருந்த தினசரி கொரோனா பாதிப்பு, நேற்று 12,830 ஆக குறைந்தது. இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 12,514 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் 251 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,58,186 லிருந்து 4,58,437 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் ஒரு நாளில் 12,718 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,36,55,842 லிருந்து 3,36,68,560 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 98.20% ஆகவும் உயிரிழப்பு விகிதம் 1.34% ஆகவும் உள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்