தேசிய செய்திகள்

மாநிலங்களவை பா.ஜனதா வேட்பாளர் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கு கொரோனா: டெல்லி ஆஸ்பத்திரியில் அனுமதி

மாநிலங்களவை பா.ஜனதா வேட்பாளர் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் டெல்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

முன்னாள் மத்திய மந்திரி ஜோதிர் ஆதித்ய சிந்தியா (வயது 49). காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கிய இவர் தலைமையுடன் ஏற்பட்ட மோதலால், காங்கிரசில் இருந்து விலகினார். பாரதீய ஜனதா கட்சி தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் அந்தக் கட்சியில் சேர்ந்தார். அதைத் தொடர்ந்து மத்திய பிரதேச அரசியலில் ஏற்பட்ட திருப்பங்களால், கமல்நாத் தலைமையில் நடந்த காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. அங்கு மீண்டும் பாரதீய ஜனதா கட்சி தலைவர் சிவராஜ் சிங் சவுகான் மார்ச் 23-ந் தேதி முதல்-மந்திரி ஆனார். இதில் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கு முக்கிய பங்கு உண்டு.

மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு வரும் 19-ந் தேதி நடக்க உள்ள தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி வேட்பாளராக ஜோதிர் ஆதித்ய சிந்தியா போட்டியிடுகிறார். இந்த நிலையில் இவருக்கும், இவரது தாயார் மாதவி ராஜே சிந்தியாவுக்கும் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர்கள் டெல்லி சாகெட் பகுதியில் அமைந்துள்ள மேக்ஸ்வெல் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்கள் 2 பேருக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டது.

இதில் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் நிலையில், ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கு கொரோனா தொற்று பாதித்து இருப்பது அந்த கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜோதிர் ஆதித்ய சிந்தியா விரைவில் குணம் அடைய மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதையொட்டி அவர் டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், நீங்களும், தாயாரும் உடல்நலமற்றிருக்கும் செய்தி கிடைத்தது. நீங்களும், தாயாரும் விரைவில் குணம் அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என கூறி உள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்கின் மகன் ஜெர்வர்தன் சிங்கும், இருவரும் விரைவில் குணம் அடைய இறைவனை பிரார்த்திப்பதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்