தேசிய செய்திகள்

ஒடிசாவில் நாளை முதல் ஜூன் 1 வரை ஊரடங்கு: அரசு அறிவிப்பு

ஒடிசாவில் நாளை முதல் வருகிற ஜூன் 1ந்தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கலாம் என அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

தினத்தந்தி

புவனேஸ்வர்,

ஒடிசாவில் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு உத்தரவுகளை பிறப்பிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதுபற்றி ஒடிசா அரசு வெளியிட்டுள்ள செய்தியில், நாளை (19ந்தேதி) காலை 5 மணி முதல் வருகிற ஜூன் 1ந்தேதி வரை மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலாகும் என தெரிவித்து உள்ளது.

இதேபோன்று வாரஇறுதி நாட்களில் முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும். இதன்படி, இந்த இரவு ஊரடங்கு வெள்ளி கிழமைகளில் மாலை 6 மணி தொடங்கி திங்கட்கிழமை காலை 5 மணிவரை அமலில் இருக்கும் என தெரிவித்து உள்ளது.

இந்த உத்தரவில், மருத்துவம் மற்றும் அது சார்ந்த சுகாதார சேவைகள் அனைத்தும், தொடர்ந்து இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது.

நிதி சார்ந்த வங்கிகள், ஏ.டி.எம்.கள் உள்ளிட்டவையும் தொடர்ந்து செயல்படும். வார நாட்களில் காலை 7 மணி முதல் 11 மணி வரை சாலையோர கடைகள், உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள், காய்கறிகள், இறைச்சி மற்றும் பால் விற்பனை ஆகியவற்றுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

உணவு விடுதிகளில் இருந்து உணவு பொருட்களை பெற்று கொண்டு வீட்டுக்கு எடுத்து செல்லலாம். வீட்டுக்கு சென்று வினியோகம் செய்யும் இ-வர்த்தக உணவு சேவைக்கும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்