தேசிய செய்திகள்

மும்பை தாராவியில் புதிதாக 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மும்பை தாராவியில் இன்று புதிதாக 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

மும்பை,

மராட்டியத்தில் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. நாட்டில் நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 3-ல் ஒரு பங்குக்கு மேற்பட்டவர்கள் மராட்டியத்தை சேர்ந்தவர்களாக உள்ளனா. மாநிலத்தில் மும்பை, தாராவி மற்றும் புனே போன்ற பெருநகரங்களில் கொரோனா பாதிப்பு சற்று கூடுதலாக இருக்கிறது.

இந்நிலையில் தாராவியில் இன்று ஒரே நாளில் புதிதாக 41 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் தாராவியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,715 ஆக உயர்ந்து உள்ளது. அங்கு கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 70 ஆக உள்ளது.

மராட்டிய மாநிலத்தில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 62,228 ஆக உயர்ந்து உள்ளது. அங்கு கொரோனா பாதிப்பால் இதுவரை 2,098 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்