தேசிய செய்திகள்

மேகதாது திட்டத்தை எடியூரப்பா செயல்படுத்த வேண்டும் - டி.கே.சிவக்குமார்

மேகதாது திட்டத்தை எடியூரப்பா செயல்படுத்த வேண்டும் என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

தினத்தந்தி

பெங்களூரு,

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:-

மண்டியா கே.ஆர்.எஸ்.அணையில் விரிசல் ஏற்பட்டதாக கூறியுள்ள சுமலதா எம்.பி. பற்றி, குமாரசாமி சில கருத்துகளை கூறியுள்ளார். இதனால் அவர்கள் 2 பேருக்கும் இடையே மோதல் உண்டாகி உள்ளது. அவர்கள் பிரச்சினையில் காங்கிரஸ் ஒருபோதும் தலையிடாது.

அணையில் விரிசல் ஏற்பட்டு இருந்தால் அதுகுறித்து முதல்-மந்திரி எடியூரப்பா, மந்திரிகள், நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள். நாங்கள் ஏதாவது கருத்து கூறி மக்களை கஷ்டப்படுத்த விரும்பவில்லை.

சுமலதா-குமாரசாமி பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது காங்கிரஸ் வேலை அல்ல. எங்களுக்கு வேறு வேலை உள்ளது. மேகதாது திட்டத்தை எடியூரப்பா செயல்படுத்த வேண்டும். அரசு சரியாக செயல்படாத போது நாங்கள் அறிவுரை கூறுவோம். இதுதான் எங்கள் வேலை.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்