தேசிய செய்திகள்

தேர்தல் கூட்டணி: ‘அ.தி.மு.க.வின் முடிவுக்காக காத்து இருக்கிறோம்’ - ஜி.கே.வாசன் பேட்டி

தேர்தல் கூட்டணி தொடர்பாக, அ.தி.மு.க.வின் முடிவுக்காக காத்து இருக்கிறோம் என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

எங்களது இயக்கப்பணிக்கும், மக்கள் பணிக்கும் அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அதற்கேற்ற வகையில் அ.தி.மு.க.வோடு கூட்டணி வைப்பது குறித்த த.மா.கா.வின் நிலைப்பாட்டை தெரிவித்து இருக்கிறோம். அது சம்பந்தமாக அ.தி.மு.க. தேர்தல்குழு ஆலோசனை நடத்தி வருகிறது. சுமுகமான முறையில் நல்ல முடிவை எடுக்கும் என்று நம்புகிறோம்.

இறுதி முடிவை எதிர்பார்த்து காத்து இருக்கிறோம். ஒத்த கருத்து ஏற்பட்டபிறகு அதிகாரப்பூர்வமாக கூட்டணி நிலையை அறிவிப்போம். தொகுதி ஒதுக்கீடு பற்றி எங்கள் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தியுள்ளோம். எனவே, நல்ல முடிவை அ.தி.மு.க. எடுக்கும் என்று கருதுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்