தேசிய செய்திகள்

காஷ்மீர் என்கவுண்டரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு காஷ்மீர் என்கவுண்டரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

தினத்தந்தி

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திபோராவின் சோக்பாபா பாகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் தொடர்பாக தகவல் அறிந்ததும் ராணுவம், போலீஸ் கூட்டாக தேடுதல் வேட்டையை தொடங்கியது. நேற்று மதியம் தொடங்கப்பட்ட தேடுதல் வேட்டை 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து இன்று முடிவுக்கு வந்துள்ளது. நேற்று இருதரப்பு இடையே நடைபெற்ற சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர், இன்று இரண்டாவது நாள் சண்டையில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் சமீபத்தில் எல்லை வழியாக இந்தியாவிற்குள் வந்துளனர், அவர்கள் இங்கிருந்து பிரிந்து பிற பகுதிகளுக்கு செல்லும் போதுதான் சண்டை நடந்துள்ளது என பாதுகாப்பு படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்