தேசிய செய்திகள்

அமெரிக்க கடற்படை தளபதியுடன் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

இந்தியாவிற்கு வந்துள்ள அமெரிக்க கடற்படை தளபதியை வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.

புதுடெல்லி,

அமெரிக்க இந்தோ-பசிபிக் கடற்படை தளபதி ஜான் அகிலினோ, 3 நாள் பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ளார். அவருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. டெல்லியில் நேற்று அவரை மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்தித்தார்.

இந்தோ-பசிபிக் பிராந்திய நிகழ்வுகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றிய நிலையில் இச்சந்திப்பு நடந்துள்ளது. இந்த சந்திப்பு குறித்து பேசிய கடற்படை தளபதி ஜான் அகிலினோ, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் எங்கள் நட்பு நாடுகள் எங்களது மிகப்பெரிய பலமாக விளங்குகிறது. இந்தியவுடனான எங்கள் உறவு சீரமைக்கப்பட்ட மதிப்புகள் மற்றும் நீடித்த கூட்டாண்மையின் அடிப்படையில் அமைந்துள்ளது. ஒற்றுமையாக இருக்கும் போது நமது வலிமை அதிகரிக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT